22. குலச்சிறை நாயனார்

அமைவிடம் : temple icon.thillaivaz anthanar
வரிசை எண் : 22
இறைவன்: ஜெகதீஸ்வரர்
இறைவி : ஜெகத்ரட்சகியம்பாள்
தலமரம் : ?
தீர்த்தம் : ?
குலம் : ?
அவதாரத் தலம் : மணமேற்குடி
முக்தி தலம் : மதுரை ?
செய்த தொண்டு : குரு வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : ஆவணி - அனுஷம்
வரலாறு : பாண்டிய நாட்டில் மணமேற்குடி என்னும் ஊரில் குலச்சிறையார் அவதாரம் செய்தார். பாண்டிய நாட்டின் முதல் அமைச்சராக இருந்து அரசியார் (மங்கையர்க்கரசி) செய்த சிவப்பணிகளுக்கு உடனாக இருந்தார். திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்து மன்னனின் வெப்பு நோயைத் தீர்க்க உதவி புரிந்தார். சைவம் தழைக்க பேருதவியாக இருந்தார்.
முகவரி : அருள்மிகு. ஜெகதீஸ்வரர் திருக்கோயில், மணமேற்குடி– 614620 புதுக்கோட்டை மாவட்டம்
கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 08.00 – 12.00 ; மாலை 04.00 – 07.00
தொடர்புக்கு : திரு. பொன்னுசாமி
தொலைபேசி : 04371-250535, எஸ். முத்துமாணிக்கம் - அலைபேசி: 9788180300

இருப்பிட வரைபடம்


குறியில் நான்கு குலத்தினர் ஆயினும் 
நெறியின் அக்குலம் நீங்கினர் ஆயினும் 
அறிவு சங்கரற்கு அன்பர் எனப் பெறில் 
செறிவுறப் பணிந்து ஏத்திய செய்கையார்

- பெ.பு. 1703
பாடல் கேளுங்கள்
 குறியில்


Zoomable Image

நாயன்மார்கள் தலவரிசை தரிசிக்க    பெரிய வரைபடத்தில் காண்க